Ayurvedic Foods : ஆயுர்வேதத்தில் சிறந்து விளங்கும் மருத்துவ குணம் படைத்த உணவுகள்!
மஞ்சள் : தினசரி உணவில் மஞ்சளை சேர்த்து கொள்வதன் மூலம் இருமல், பசியின்மை, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, சுவாசக் கோளாறுகள் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கலாம்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதேன்: தேனை சூடான தண்ணீரில் கலந்து குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கலாம். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இதயம் சார்ந்த நோய்களின் அபாயத்தை குறைக்கலாம்
நெய்: ஆயுர்வேதத்தில் முக்கிய இடத்தை பிடிக்கிறது நெய். இதை சாப்பாட்டில் எளிதில் சேர்த்துக் கொள்ளலாம். நெய் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க செய்வதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கலாம்.
இஞ்சி : இயற்கையாகவே ஜீரண சக்தியை தூண்டுவதில் இஞ்சி பெரும் பங்கு வகிக்கிறது என்று கூறப்படுகிறது. அஜீரணக் கோளாறு, குமட்டல், வாந்தி போன்ற சிக்கல்களை குறைக்கலாம்.
நெல்லிக்காய் : நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். தினசரி எடுத்துக் கொள்ளும் போது குடலை சுத்தப்படுத்தி குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
துளசி : துளசி மூலிகைச் செடியாகும். இருமல், சளித் தொல்லை, ஆஸ்துமா பிரச்சினைக்கு துளசியின் சாறு மருந்தாய் அமைகிறது. இதில் இருக்கும் ஜிங்க், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -