Potato Egg Curry : சப்பாத்தி, தோசைக்கு செம காம்பினேஷன்...உருளை முட்டைக்கறி...ட்ரை பண்ணுங்க..
முதலில் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாயை இடித்து வைத்துக்கொள்ள வேண்டும். கடைசியாக சிறிது கருவேப்பிலை சேர்த்து இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபின்பு உருளைக்கிழங்கை குக்கரில் தேவையான தண்ணீர் சேர்த்து வேகவைத்து பின் தோல்களை நீக்கி நன்கு மசித்துக்கொள்ள வேண்டும். அதன் பின்பு ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி முட்டையை அரை பதமாக வேகவைத்து, முட்டையின் ஓடுகளை நீக்கி வைக்கவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், மற்றும் சிறிது கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். பாதி வதங்கியதும் இடித்து வைத்த சின்ன வெங்காயக் கலவையை சேர்த்து வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும் சாம்பார் பொடி மற்றும் தூள் வகைகளை சேர்த்து கிளற வேண்டும். சிறிது தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக நன்றாக கொதிக்கவிட வேண்டும்.
கரண்டியால் முட்டையை ஒன்றிரண்டாக பொடித்துவிட்டு அதில் சேர்க்கவும். மசித்த உருளைக்கிழங்கையும் சேர்க்கவும். அனைத்தும் சேர்ந்து நன்றாக கொதித்ததும், கடைசியாக மிளகுப் பொடி, மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளைத் தூவி விடவும்.
ப்பொழுது சுவையான உருளை முட்டைக்கறி தயாராகிவிட்டது.
இதை சப்பாத்தி அல்லது தோசையுடன் வைத்து சாப்பிட்டு பாருங்கள் சுவை அசத்தலாக இருக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -