✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Aloo Egg Curry : உருளை முட்டைக்கறி...சப்பாத்தி, தோசைக்கு செம காம்பினேஷன்.. எப்படி செய்வது?

ஜான்சி ராணி   |  17 Sep 2023 10:00 PM (IST)
1

முதலில் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாயை இடித்து வைத்துக்கொள்ள வேண்டும். கடைசியாக சிறிது கருவேப்பிலை சேர்த்து இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

2

உருளைக்கிழங்கை குக்கரில் தேவையான தண்ணீர் சேர்த்து வேகவைத்து பின் தோல்களை நீக்கி நன்கு மசித்துக்கொள்ள வேண்டும்.

3

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி முட்டையை அரை பதமாக வேகவைத்து, முட்டையின் ஓடுகளை நீக்கி வைக்கவும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.

4

பொடியாக நறுக்கிய வெங்காயம், மற்றும் சிறிது கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். பாதி வதங்கியதும் இடித்து வைத்த சின்ன வெங்காயக் கலவையை சேர்த்து வதக்கவும்.

5

பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் சாம்பார் பொடி மற்றும் தூள் வகைகளை சேர்த்து கிளற வேண்டும். 

6

சிறிது தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக நன்றாக கொதிக்கவிட வேண்டும்.

7

மசித்த உருளைக்கிழங்கையும் சேர்க்கவும். அனைத்தும் சேர்ந்து நன்றாக கொதித்ததும், கடைசியாக மிளகுப் பொடி, மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளைத் தூவி விடவும்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • லைப்ஸ்டைல்
  • Aloo Egg Curry : உருளை முட்டைக்கறி...சப்பாத்தி, தோசைக்கு செம காம்பினேஷன்.. எப்படி செய்வது?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.