Indigestion Home Remedies : தீபாவளி நேரத்தில் செரிமான பிரச்னைகளால் அவதிப்படாமல் இருக்க இவற்றை உங்கள் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்..!
பண்டிகை காலமென்று வந்துவிட்டால் போதும் பலரும் கார வகைகள் மற்றும் இனிப்புகளை சாப்பிட்டு விட்டு தூங்குவதையே வேலையாக கொள்வார்கள். இவ்வாறு செய்வதால் ஃபைபர் பற்றாக்குறை மற்றும் உடற்பயிற்சியின் போதாமையால் அஜிரன கோளாறுகள் ஏற்படலாம். அவற்றில் இருந்து உங்களை தற்காத்து கொள்ள இவற்றை உங்கள் தீபாவளி விருந்தில் சேர்த்து கொள்ளுங்கள்.
இஞ்சி, நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணத்திற்கு சிறந்த மருந்தாகும். இஞ்சியை உணவில் சேர்த்து கொள்ள முடியாதவர்கள் இஞ்சி டீயாக பருகலாம்.
சோம்பில் ஃபைஃபர்கள் நிறைந்துள்ளது. உணவிற்கு பிறகு சிறிதளவு சோம்பு விதைகளை உண்பதால் செரிமானம் சார்ந்த பிரச்னைகள் சரியாகலாம்.
சியா விதைகள், உங்கள் குடலில் உள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரித்து செரிமானத்திற்கு உதவுகிறது. சியா விதைகளை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து சாலட்களில் சேர்த்து உண்ணலாம்.
ஆப்பிளில் உள்ள பெக்டின் செர்மானத்திற்கு உதவுகிறது. மேலும் குடல் பிரச்னைகளை சரி செய்யவும் உதவுகிறது.
தயிரில் உள்ள புரோபயாடிஸ் உங்கள் வயிறு அஜீரணப் பிரச்சினைகளால் அவதிப்படாமல் பார்த்து கொள்ள உதவுகிறது.