Aamras: பிரதமர் மோடி விரும்பி சாப்பிடும் ஆம்ரஸ் - செய்றது ரொம்பவே ஈசி - ரெசிபி இதோ!
ஜான்சி ராணி | 23 Mar 2024 01:55 PM (IST)
1
கோட வந்தாச்சு. மாம்பழமும் நிறைய கிடைக்கும். அதை வைத்து இனிப்பான ஆம்ரஸ் செய்யலாம். இதற்கு அல்ஃபோன்சா மாம்பழம் இருந்தால் நன்றாக இருக்கும்.
2
நன்றாக பழுத்த மாம்பழத்தை தோல் நீக்கி எடுத்துகொள்ளவும்.
3
மாம்பழம் விழுதாக கிடைக்க மிக்ஸ்யில் அரைக்கலாம். தேவையெனில் உடன் தேன் சேர்க்கலாம்.
4
இல்லையெனில், மாம்பழத்தை நன்றாக மசித்தும் ஆம்ரஸ் செய்யலாம்.
5
மாம்பழத்தை மசித்து எடுத்தால் அதை வடிக்கட்டி கொள்ளலாம். தேன் மட்டுமே சேர்க்கலாம். சர்க்கரை வேண்டாம்.
6
இதோடு, காய்ச்சி ஆற வைத்த பால், குங்கும பூ, ஏலக்காய் பொடி சிறிதளவு சேர்த்து நன்றாக கலக்கம் வேண்டும். அவ்வளவுதான் ஆம்ரஸ் ரெடி. ஃப்ரிட்ட்ஜில் வைத்து சாப்பிடலாம்.
7
ஆம்ரஸ் பூரியுடன் சேர்த்து சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும்.