Skin Care Tips: மிருதுவான சருமம் வேண்டுமா..? இந்த விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!
க்ளியர் ஸ்கின் பெற சில எளிமையான வழிமுறைகள் மூலம் இதனை சாத்தியப்படுத்தலாம் என நிபுணர்கள். அவற்றில் சில உங்களுக்காக..முகத்தில் உள்ள பருக்களை ஒருபோதும் உடைக்காத்தீர்கள். பருக்கள் இருந்தால் அது முகத்திற்குள் தேங்கி நிற்கும் எண்ணெய், சீபம் மற்றும் பாக்டீரியாவின் வெளிப்பாடு என்று அர்த்தம். நீங்கள் பருக்களை உடைத்தால் பாக்டீரியா வெளியேறி அது மற்ற இடங்களிலும் உருவாக்கும்.
வெந்நீர் கொண்ட முகத்தை கழுவாதீர்கள். வெந்நீர் சருமத்தில் உள்ள இயற்கையான மாய்ஸ்சரைஸரை நீக்கிவிடும். இதனால் சருமம் வறண்டு போக வாய்ப்புள்ளது. குளிர்ந்த நீர் அல்லது இளம் சூடான் தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும்.
மேக்கப் பொருட்களைப் பயன்படுத்தும் போது அதிகப்படியான ரசாயனம் கலந்த சாதனங்களை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. மேக்கப்பை அப்புறப்படுத்தும் போது ஆல்கஹால் இல்லாத சாதனங்களைப் பயன்படுத்துங்கள். தேங்காய் எண்ணெய் கொண்டு மேக்கப் ரிமூவ் செய்வது நல்லது. இது முகத்தில் இயற்கையாக உள்ள ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும்.
குளிர், வெயில், மழை என எந்தப் பருவ காலமாக இருந்தாலும் சருமத்தை மாய்ஸ்சரைஸ் செய்வது அவசியம். ஆனால் ஒவ்வொரு பருவகாலத்திற்கும் ஒவ்வொரு சருமத்திற்கும் ஒவ்வொரு விதமான மாய்ஸ்சரைஸர் தேவைப்படும். அதிக கெமிக்கல் இல்லாத மாய்ஸ்சரைஸர் பயன்படுத்தவும். வீட்டிலேயே கற்றாழை வளர்க்க முடியும் என்றால் அதை பயன்படுத்துவது நல்லது. ஹெர்பல் டீ குடிக்கலாம்.
மன அழுத்தம் அதிகமானால் ஒரு நடை பயிற்ச்சி, சைக்கிளிங், நீச்சல் என ஏதேனும் ஒன்றின் மீது கவனம் செலுத்துங்கள். பேட்மின்டன் விளையாடலாம். இல்லாவிட்டால் யோகா பயிற்சி மேற்கொள்ளலாம். இவ்வாறாக செய்வதால் மன அழுத்தம் நீங்கும். உள்ளத்தின் கண்ணாடி தானே முகம். டோனர்கள் வீட்டிலேயே தயாரித்து அதை பயன்படுத்தலாம். ஜூஸ் வெள்ளரிக்காய் உள்ளிட்டவற்றை சாப்பிடலாம்.
முகத்திற்கு அவ்வபோது மாஸ்க் போடலாம். இது இயற்கையாக இறந்த செல்களை நீக்கும். அடிக்கடி முகத்தை தண்ணீரை கொண்டு கழுவ வேண்டும்.