Energy Drinks: விரதகால சத்து மிகுந்த ஜூஸ் வகை ரெசிபி!
பேரீட்சை, ஏலக்காய் சேர்த்து அரைத்து இளநீருடன் நன்றாக கலக்கவும். இதை ஜில்லென்றும் குடிக்கலாம். விரதகாலத்திற்கு ஏற்ற இயற்கை டிரிங்க்.
வாழைப்பழத்துடன் பாதம், தேன் சேர்த்து ஸ்மூத்தி தயாரித்து குடிக்கலாம். விரத நாட்களில் இது உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்குகிறது.
வெள்ளரிக்காய் உடலுக்கு நல்ல குளிர்ச்சி தரக்கூடியது. இதில் குறைந்த அளவு கலோரி. ஆனால் நிறைய சத்துள்ள ஜூஸ். வைட்டமின் சி, மேக்னீசியம், பொட்டாசியம் என எல்லாம் இருக்கிறது. வெள்ளரிக்காய் உடன் சிறிதளவு புதினா சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் ப்ளண்ட் செய்தால் புதினா வெள்ளரி கூலர் ரெடி.
கற்றாழையில் ஏராளமான ஊட்டச்சத்துகள் இருப்பது நாம் அறிந்ததே. இதோடு, அரை கப் எலுமிச்சை, தேன், வெல்லம் சேர்த்து ஜூஸ் செய்து குடிக்கலாம். கற்றாழையில் மிளகு, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்தும் ஜூஸ் செய்யலாம். மோர் உடன் கற்றாழை, மிளகாய், புதினா, கொத்தமல்லி சேர்த்து மிக்ஸியில் அடித்தும் கற்றாழை ஜூஸ் தயாரிக்கலாம்.
வழக்கமாக செய்யும் எலுமிச்சை ஜூஸ் உடன் சிறு துண்டு இஞ்சி, உப்பு சேர்த்தால் ருசியாக இருக்கும்.
அன்னாசி துண்டுகளுடன் Basil இலைகள் சேர்த்து மிக்ஸியில் அரைத்தெடுத்தால் அன்னாசி பேசில் (Basil) ஜூஸ் ரெடி. இதோடு தேன், நாட்டுச் சக்கரை சேர்த்துகொள்வது நல்லது.