Egg Diet Plan : உடல் எடையை குறைக்க 7 நாள் முட்டை உணவு நல்லதா? : நிபுணர்கள் சொல்வது என்ன?
உடல் எடை குறைக்க பல்வேறு டயட் முறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன அப்படியான உணவுத் திட்டங்களில் ஒன்று 7 நாள் முட்டை உணவு.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகாலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு முட்டைகளை சாப்பிடுவது உடல் எடையை குறைப்பதோடு, உடலுக்கு சரியான அளவு புரதத்தையும் வழங்குவதாக பல்வேறு வடிவங்களில் கூறப்படுகிறது.
காலை உணவாக முட்டைகளை சாப்பிடுவது உங்கள் நாளை தொடங்குவதற்கான சரியான வழியாக இருக்கலாம்! இருப்பினும், ஒரு வாரத்திற்கு ஒரு நாளைக்கு மூன்று வேளையும் முட்டைகளை உட்கொள்வது தவறான யோசனையாகத் தோன்றலாம்.
ஆனால் உண்மை என்னவென்றால், ஒரு வாரத்திற்கு முட்டை உணவை உட்கொள்வது எப்படி என்கிற வழிமுறைகளை நீங்கள் கவனித்தால் உங்கள் உடலில் நம்பமுடியாத அளவுக்கு மாற்றங்களைக் கொண்டு வரும்.
உடல் பருமனுடன் நேரடியாக இணைக்கப்பட்ட பிசிஓஎஸ் அறிகுறிகளை மாற்றுவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் வைட்டமின் டியை முட்டைகள் வழங்க உதவுகின்றன.
ஒரு வார முட்டை டயட் திட்டம், அதிக புரத உள்ளடக்கம் கொண்ட விரைவான எடை இழப்பு முறையாகும். இருப்பினும், ஒரு நேரத்தில் 2 வாரங்களுக்கு மேல் இதனைத் தொடர வேண்டாம். இது தவிர, பக்கவிளைவுகளைத் தவிர்க்க, உணவில் சில முன்நிபந்தனைகள் பின்பற்றப்பட வேண்டும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -