மசாலா பொருட்கள் தரத்தைப் பாதுகாக்க இப்படி ஸ்டோர் செய்யுங்க; இதோ டிப்ஸ்!
மசாலா நறுமணம், சுவை தருவதுடன் அதில் மருத்துவ குணங்களும் இருப்பதாக் ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. மசாலா பொருட்களை வாங்கும்போது கவனிக்க வேண்டியவைகளாக சிலவற்றை இங்கே காணலாம்
உதாரணமாக, மல்லி, மிளகாய் உள்ளிட்டவற்றை வாங்கி வெயிலில் காயவைத்து பொடியாக அரைத்து காற்று புகாத, ஈரப்பதம் இல்லாத டப்பாவில் சேமித்து வைக்கவும். அதன் தரம் மாறாமல் இருக்கும். கடைகளில் கிடைக்கும் பொடி வகைகளில் நீண்டநாள் கெட்டுப்போகாமல் இருக்க ரசாயனம் சேர்க்கலாம்.
மசாலா பொருட்களின் நிறங்களை கவனிக்க வேண்டும். மிளகு, மிளகாய் உள்ளிட்டவை இயல்பான நிறத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மசாலா பொருட்களை காற்று புகாத டப்பாக்களில் சேமிக்க வேண்டும். அதிகம் வெப்பம் உள்ள இடங்களிலும் வைக்க கூடாது. ஈரப்பதம் இல்லாமல் இருந்தால் மசாலா கெடாமல் இருக்கும்.
இவற்றை வாங்கும்போது கலப்படம் உள்ளதா என்பதை கவனித்தும் வாங்க வேண்டும். அந்தப் பொருட்களின் நிறம், தரம் ஆகியவற்றை வைத்து கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறியலாம்.