Ghee Benefits : நெய் சாப்பிடுவதால் உண்டாகும் 6 நன்மைகள்!
நெய்யில் வைட்டமின்கள் A, D, E மற்றும் K அதுமட்டுமல்லாமல் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளது. சருமத்தை உள்ளிருந்து ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைக்கவும் உதவுகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநெய்யில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், பிற ஊட்டச்சத்துக்கள் வீக்கத்தை குறைத்து மூட்டு வலியை போக்கலாம்
நெய் சாப்பிடும் பொழுது நோய் எதிர்ப்பு அமைப்பு வலுப்படுத்தப்படுகிறது. மூளை செல்களின் மேம்பாடு, பராமரிப்புக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நெய்யில் நிறைந்துள்ளது.
நெய் செரிமான பாதையில் லூப்ரிகண்டாக செயல்படுகிறது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கிறது. செரிமான பிரச்சினை உள்ளவர்கள் தினமும் காலையில் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடலாம்.
நெய் சாப்பிட்டால் ஹார்மோன்கள் சமநிலையில் இருக்கலாம். இதனால் ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் அது தொடர்பான உடல்நலக் கோளாறுகள் குறையலாம்.
காலையில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சாப்பிடுவதால் உடலில் உள்ள நச்சுக்கள் அழியும் என சொல்லப்படுகிறது. நெய்யில் பல நன்மைகள் இருந்தாலும் அளவோடு எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -