Climbing stairs Healthy Habit: லிஃப்ட் வேண்டாமே! மாடி படிக்கட்டுகளை பயன்படுத்தலாமே..!
லிஃப்டிற்கு மாற்றாக படிக்கட்டுகளை பயன்படுத்தும்போது, உங்கள் இருதய நலனில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார், டாக்டர் ஜெயதி ரகித்
தினமும் நடைப்பயிற்சி செய்ய போதிய நேரம் இல்லாவிட்டாலும் எதாவதொரு வகையில் உடல் இயக்கத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். படிக்கட்டுகள் ஏறுவதால் கால்கள் மற்றும் கால் பகுதிகளில் உள்ள தசை ஆகியவற்றிற்கு வலு சேர்க்கிறது.
வெயிட் மேனேஸ்மெண்ட் நோக்கமாக உள்ளோர் படிக்கட்டுகளை தேர்ந்தெடுப்பது கலோரிகளை எரிக்க உதவுகிறது. எடை மேலாண்மைக்கு உதவுகிறது மற்றும் உடல் பருமன் அபாயத்தைக் குறைக்கிறது.
உடல் பருமன் இதயப் பிரச்சனைகளுக்கு முக்கிய பங்களிப்பாகும். படிக்கட்டுகளில் ஏறுவது தசைகளுக்கு வேலை கொடுக்கிறது. ஆரோக்கியமான எடையை பராமரிப்பது இதய ஆரோக்கியத்திற்கு முக்கியமானது.
படிக்கட்டு ஏறுதல் உங்கள் உடல் முழுவதும் சிறந்த இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது. ஏறும்போது இதயம் அதிக இரத்தத்தை பம்ப் செய்கிறது