Carrot Cake: கேரட் கேக் பிடிக்குமா? செய்யுறது ரொம்ப ஈசி... வாங்க எப்படி செய்வதென்று பார்க்கலாம்
கேரட் கேக் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையானதாக இருக்கும். மிக எளிமையாக வீட்டிலேயே செய்து விடலாம். வாங்க கேரட் கேக் எப்படி செய்வதென்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவால்நட்ஸை கொர கொரவென பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் மைதா, கோதுமை, பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, சல்லடைக் கொண்டு சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பவுலில் தயிர், பால், சர்க்கரை மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து சர்க்கரை கரையும் வரை நன்கு மிக்ஸ் செய்து விட வேண்டும்.
அதில் ஏலக்காய் பொடி, வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து, பின் அதில் துருவிய கேரட், சலித்து வைத்துள்ள மாவு ஆகியவற்றை சேர்த்து, வால்நட்ஸை பொடித்து போட்டு, கட்டிப்படாதவாறு நன்கு கிளறி விட வேண்டும்.
மைக்ரோ ஓவனை 182 டிகிரியில் 10 நிமிடம் சூடேற்ற வேண்டும். அதற்குள் பேக்கிங் ட்ரேயில் பட்டர் பேப்பரை பரப்பி, அதன் மேல் வெண்ணெயை தடவி, மைதாவை சிறிது தூவி, பின் அதில் கேக் கலவையை ஊற்ற வேண்டும்.
மைக்ரோ ஓவனில் வைத்து 20-25 நிமிடம் பேக் செய்ய வேண்டும் (வேக வைக்க வேண்டும்).
டுத்து கேக் நன்கு வெந்து விட்டதா என்று டூத்பிக் கொண்டு குத்திப் பார்க்க வேண்டும். டூத்பிக்கில் மாவு ஒட்டினால், மீண்டும் ஓவனில் வைத்து 5லிருந்து 10 நிமிடம் வரை பேக் செய்து எடுக்க வேண்டும். அவ்வளவுதான், சுவையான சாஃப்டான கேரட் கேக் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -