Car Driving : புதுசா கார் ஓட்டுறீங்களா? அப்போ உங்களுக்கான டிப்ஸ்தான் இது!
முதலில் காரின் இருக்கையை உங்களுக்கு ஏற்றது போல் மாற்றிக்கொள்ளவும். உங்களால் ப்ரேக், ஆக்ஸிலரேட்டர் உள்ளிட்டவற்றை இயல்பாக இயக்க முடிகிறதா? அல்லது அசெளகரியமாக இருக்கிறதா? என்பதை பார்த்து அட்ஜெஸ்ட் செய்து வண்டி ஓட்ட தொடங்கவும்
ஸ்டியரிங்கை ஒழுங்காக பிடிக்கவும். ஒரே கையை மட்டும் பயன்படுத்தாமல், இரு கைகளையும் பயன்படுத்தவும். கடிகாரத்தை ஸ்டியரிங்காக கற்பனை செய்து கொண்டு 10 உள்ள இடத்தில் இடது கையையும், 2 உள்ள இடத்தில் வலது கையையும் வைக்கவும்.
காரில் உள்ள ஹார்ன், இண்டிகேட்டரை தேவைப்படும் இடங்களில் நிச்சயமாக பயன்படுத்தவும். மற்ற வாகன ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கவே இவை இரண்டும் உள்ளன என்பதை உணர்ந்து, மற்றவர்களை எரிச்சலுக்கு உள்ளாக்கும் படி இதை பயன்படுத்த வேண்டாம்.
வண்டியை நிறுத்தும் போது, உங்களுக்கு முன் இருக்கும் காருக்கும் உங்களுக்கும் சற்று இடைவெளி இருப்பதை உறுதி செய்யவும். அப்படி செய்யும் போது, உங்கள் வண்டி உங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். வண்டியை மீண்டும் இயக்கும் போது எந்த பிரச்சினையும் இல்லாமல் போக முடியும். இடிப்பதற்கான வாய்ப்பும் ஏற்படாது.
படபடப்புடன் வண்டியை இயக்காமல் சற்று ரிலாக்ஸாக இருக்கவும். எதையாவது நினைத்துக்கொண்டு கவனக்குறைவுடன் காரை ஓட்ட வேண்டாம். இப்படி இருந்தால் பெரும்பாலும் விபத்துகள் ஏற்படாது.