Pudalangai Thayir Pachadi : புடலங்காய் தயிர் பச்சடி.. சாதத்துடன் சாப்பிட சூப்பரா இருக்கும்!
தேவையான பொருட்கள் :புடலங்காய் - 3, மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், தேங்காய் துருவல் - 1/4 கப், நறுக்கிய இஞ்சி - 1துண்டு, பச்சை மிளகாய் - 4 , உப்பு, தயிர் - 1 கப், எண்ணெய் - 2 தேக்கரண்டி, கடுகு- – 1/2 டீஸ்பூன், சீரகம் - 1/2 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன், சிவப்பு மிளகாய் – 2 , பெருங்காய தூள் – 1/4 டீஸ்பூன், கறிவேப்பிலை, தண்ணீர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை: .முதலில் புடலங்காயை சின்ன துண்டுகளாக நறுக்கி உப்பு, மஞ்சள் கலந்த தண்ணீரில் பத்து நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி தனியாக எடுத்துக் கொள்ளவும்.
அடுத்தது மிக்ஸியில் தேங்காய் துருவல், இஞ்சி, பச்சை மிளகாய், சேர்த்து கொரகொரப்பாக அரைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
அடுத்தது துருவிய தேங்காய் துருவல் மற்றும் வேகவைத்த புடலங்காய் துண்டுகளை தயிருடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அதன்பிறகு தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
அடுத்தது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு உளுத்தம் பருப்பு, சீரகம், பச்சை மிளகாய், பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
அடுத்தது கடுகு தாளிப்பை தயிர் கலவையில் சேர்த்து கொத்தமல்லி தூவிவிட்டால் சுவையான புடலங்காய் தயிர் பச்சடி தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -