Nonstick Pans : நான்ஸ்டிக் தவாக்கள் சீக்கிரமே வீணாகிப்போயிடுதா? இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க..
நான்ஸ்டிக் பேன்களை பயன்படுத்தும் முன்னர் அதன் மீது எண்ணெய் தேய்க்கவும். அவ்வாறு எண்ணெய்யை தேய்த்துவிடுவதால் அது கோட்டிங் போகாமல் பாதுகாக்கப்படுகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநான்ஸ்டிக் பேன் விற்கும்போதே அத்துடன் உட்டன் ஸ்பேடுலா எனப்படும் மரக்கரண்டி தருவார்கள். ஆனால் நம்மில் பலரும் அதை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு நம் வீட்டில் உள்ள எவர்சில்வர் கரண்டிகளைப் பயன்படுத்துவோம்.
நான்ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்தி சமைக்கும்போது அடுப்பின் தீயை சிம்மில் வைத்து பயன்படுத்தலாம். இதனால் பாத்திரம் சீராக சூடேறும். இது நான்ஸ்டிக் பாத்திரத்தின் நிறம் மாறாமல் பாதுகாக்கும்.
நான்ஸ்டிக் பேனை சுத்தம் செய்வதில் கவனம் தேவை. பேனை பயன்படுத்தியவுடன் அதன் மீது உடனே குளிர்ந்த நீரை ஊற்றக் கூடாது. இது பேனில் தெர்மல் ஷாக் ஏற்படச் செய்யும். இதனால் பேனின் கோட்டிங் வெகு சீக்கிரமே போய்விடும்.
மாறாக அந்தப் பேன் குளிர்ந்துபோனவுடன் மிதமான ஸ்பாஞ்சு கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பேனில் சிறிது பாத்திரம் கழுவும் திரவத்தை தண்ணீரில் கலந்து ஊற்றிவைத்துவிட்டு பின்னர் ஸ்பாஞ்ச் கொண்டு சுத்தம் செய்வது சரியான முறையாகும்.
சமைத்து சுத்தம் செய்த பின்னர் நான்ஸ்டிக் பாத்திரங்களை அதற்கென தனியான இடத்தில் வைக்கவும். அதன் மீது வேறு பாத்திரங்களை வைப்பது. அல்லது ஒரு நான்ஸ்டிக் பாத்திரம் மீது இன்னொன்றை வைப்பது போன்ற செயல்களைச் செய்யக் கூடாது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -