Side Effects OF AC: ஏசி பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் என்ன?தெரிஞ்சிக்கோங்க!
ஏசி என்ப்படும் குளிரூட்டியை பயன்படுத்துவது இன்றைய காலத்தில் சர்வ சாதாரணமாகிவிட்டது. அலுவலகத்தில் மட்டுமின்றி, வீட்டிலும் ஏசி என்பது அத்தியாவசிய பொருளாகிவிட்டது. ஏசி வெயிலில் இருந்து மட்டுமல்ல, ஈரப்பதத்திலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது. ஆனால், செயற்கையாகக் கட்டுப்படுத்தப்படும் சூழலால், உடல் ஆரோக்கியத்தில் பல பிரச்னைகளைச் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appடலின் இயற்கையான நோய் எதிர்ப்புச் சக்தி இழக்கப்படுகிறது. வெப்பநிலை ஏற்ற இறக்கங்கள் காரணமாக நோய் எதிர்ப்பு அமைப்பு பெரிதும் பாதிக்கப்படுகிறது. நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடுவதில் ஆன்டிபாடிகள் இருக்க வேண்டிய அளவுக்கு பயனுள்ளதாக இல்லை.
ஏசி காற்றை நீண்ட நேரம் சுவாசிப்பது ஒவ்வாமை உள்ளிட்ட சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தும். உங்களுக்கு ஏற்கனவே சுவாச பிரச்சனைகள் இருந்தால், அது மோசமாகிவிடும். ஏசி காற்றினால் தொண்டை வறட்சி மற்றும் சுவாச கோளாறு ஏற்படுகிறது.
ஏசி அறைகளில் அதிக நேரம் செலவிடுவதால் மன சோர்வு ஏற்படுகிறது. சிறிது நேரத்தில் மூளை சோர்வடைகிறது. மெதுவாக தலைவலியும் ஏற்படலாம். புதிய காற்று சுழற்சி இல்லாததாலும், போதிய வெளிச்சம் இல்லாததாலும் மூளையும் உடலும் மந்தமாக இருக்கும்.
குளிரூட்டி குளிர்ச்சியை தந்தாலும் நன்மையை விட தீமையே அதிகம் என்று கூறப்படுகிறது. அவசியம் இல்லாவிட்டால் ஏசியில் இருந்து விலகி இருப்பது நல்லது.
ஏசிகள் காற்றில் உள்ள ஈரப்பதத்தை நீக்கும். இதனால் சருமம் எளிதில் வறண்டு போகும். மேலும் உடலில் நீர்ச்சத்து குறையும். இந்த தகவல்கள் நிபுணர்கள் தெரிவித்த கருத்துகள் மட்டுமே. ABP Nadu கருத்து அல்ல.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -