Crispy Dosa : தோசை மாவை எப்படி ரெடி பண்ணா, மொறு மொறு தோசையை ஜமாய்க்கலாம்.. டிப்ஸ்
எந்நாளும் எந்நேரத்துக்கும் ஒருவர் ‘நோ’ சொல்லாமல் சாப்பிடும் உணவுகளில் ஒன்று தோசை.
ஆனால் தோசை சாப்பிடத் தெரிந்த அளவுக்கு எல்லோருக்கும் சரிவர தோசை ஊற்ற வராது... எளிதாக முறுவலாக தோசை ஊற்ற சில டிப்ஸ்கள் இதோ...
முக்கியமாக மாவினை நைஸாக அரைக்காமல் நரநரவென்னும் பதத்தில் அரைக்க வேண்டும்.
துருப்பிடிக்காத எஃகு பாத்திரத்தில் மாவு சற்று வேகமாகப் புளித்துவிடும், எனவே சீல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் அல்லது பீங்கான் பாத்திரத்தைப் பயன்படுத்துவது எளிதில் புளிக்காமல் பார்த்துக்கொள்ளும்.
தோசை ஊற்றத் தொடங்குவதற்கு முன்பு தோசைக்கல் சூடாக இருக்கிறதா என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். போதுமான அளவு சூடாக இருக்கிறதா என்பதை அறிய ஒரு எளிய சோதனை, அதன் மீது சிறிது தண்ணீர் தெளிப்பது.
மிருதுவான தோசைகளை உருவாக்க தோசை கல்லை மிதமான தீயில் சூடாக்கவும். அது போதுமான அளவு சூடாக இருக்கும்போது, சில துளிகள் எண்ணெய் சேர்த்து வெங்காயம் கொண்டு கல்லைத் தேய்க்கவும்.
வட்டமான தோசையைச் சுற்றி சில துளிகள் எண்ணெயை ஊற்றவும், தோசையின் அடிப்பகுதி பொன்னிறமாகும் வரை வேகவைக்கவும்.
இதனை தேங்காய் சட்னி, சட்னி பொடி அல்லது சாம்பார் உடன் பரிமாறவும்.