Tomato Jam: சுவையான தக்காளி ஜாம் செய்ய எளிய செய்முறை: இதோ!
ஜாம் பிடிக்கும் என்பவர்கள் கடைகளில் கிடைப்பதை வாங்காமல் வீட்டிலேயே இயற்கையான பொருட்களை வைத்து தயாரிக்கலாம். என்னென்ன வேண்டும் என்றால் தக்காளி - 10 எலுமிச்சைப்பழச்சாறு - 1 பழம் இஞ்சி - 1 தேக்கரண்டி துருவியது உப்பு - 1/2 தேக்கரண்டி சில்லி பிளேக்ஸ் - 1 தேக்கரண்டி பட்டை தூள் - 1/2 தேக்கரண்டி சர்க்கரை - 1 கப்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதக்காளியில் இருந்து விதைகளை நீக்கி, பொடிசாக நறுக்கவும். கடாயை சூடாக்கி, நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.
அடுத்து எலுமிச்சைப்பழச்சாறு, இஞ்சி, உப்பு, சில்லி பிளேக்ஸ், பட்டை தூள், சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து கலந்து விட்டு 10 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.
10 நிமிடத்திற்கு பிறகு தண்ணீர் வற்றியதும், தொடர்ந்து கிளறினால் ஜாம் சரியான பதத்திற்கு வந்துவிடும்.
தக்காளி ஜாமை சப்பாத்தி, பிஸ்கட், ரொட்டி போன்றவற்றுக்கு பயன்படுத்தலாம். இதை காற்று புகாத ஜாடியில் சேமித்து வைக்கலாம். ஒரு வாரத்திற்கு நன்றாக இருக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -