Health: கணினி முன்னாடி மணிக்கணக்கா உட்காந்து வேலை பாக்குறீங்களா? இதைப் படிங்க!
வாழ்க்கை முறை செடன்ட்ரி எனப்படும் உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறையாகவே இருக்கிறது. அப்படியிருக்க ஒரு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டு மருத்துவர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
நாம் ஒரு நாளில் 2 மணி நேரத்துக்கு மேல் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்போம் என்றால் நாம் ஒரு சிகரெட் புகைப்பதைவிட அதிகமான கேட்டை நம் உடலுக்குச் செய்கிறோம் என்று அந்த மருத்துவர் எச்சரித்துள்ளார். இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக ஓரிடத்தில் உட்கார்ந்திருந்தால் உங்களின் உடல் தோரணையில் சிக்கல் ஏற்படும்.
இதனால் சர்க்கரை நோய், இதய நோய்கள் உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் ஏற்படும். உடல் முழுவதுமான நரம்புகள் அழுத்தத்திற்கு உள்ளாகும்.
, இரண்டு மணி நேரம் ஓரே இடத்தில் தொடர்ச்சியாக அமர்ந்திருந்தால் நம் உடலில் உள்ள சக்தி பயன்படுத்தப்படாது. அதனால் வளர்சிதை மாற்றம் குறையும். குறைந்த வளர்சிதை மாற்றம் என்பது உடலில் சேர்ந்த ஊட்டச்சத்துகள் பயன்படுத்தப்படாமல் போகக் கூடிய நிலையை உருவாக்கும். நம் உடலில் ஊட்டச்சத்துகள் சரியாக பயன்படுத்தப்படாமல் போகும்போது அதனால் கல்லீரலில் அவை தேங்கும் சூழல் உருவாகும்.
ஃபேட்டி ஆசிட்ஸ் ஆக்ஸிடேஷன், புரோட்டீஸ் பிரேக் டவுன், ப்ரோட்டீ சின்தஸிஸ் ஆகியன சரிவர செய்யப்படாமல் போகும். அதிகப்பட்டியான குளுக்கோஸ் ஃபேட்டி லிவரை உருவாக்கும். வயது ஏறஏற வளர்சிதை மாற்றம் உடலில் குறையும். அதில் நாம் அதிக நேரம் உட்கார்ந்தே இருந்தால் இன்னும் பல நோய்கள் நம்மை வந்து சேரும்.தொடர்ச்சியாய் பல மணி நேரம் உட்கார்ந்து வேலை செய்தால் கொழுப்பைக் கரைக்கும் நொதிகள் சுரப்பது குறையும். கெட்ட கொழுப்பு எரியாமல், உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். உட்கார்ந்து வேலை செய்வது வருடக் கணக்கில் தொடர்ந்தால், எலும்பு வளர்ச்சி குறையவதோடு, அடர்த்தியும் குறையும். உடலில் இயக்கம் இல்லாதபோது போதிய ரத்தம் மூளைக்குச் செல்லாது.
இதற்குத் தீர்வாக அவர், ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் 2 அல்லது 3 நிமிடங்கள் எழுந்து நடக்கவும். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஏதேனும் சிறிய உடற்பயிற்சி செய்வதும் நலம். காலையில் எழுந்தவுடன் ஒரு சிறு தூராமவது நடந்து வரவும். 80 நிமிடங்கள் வேலை 2 நிமிடங்கள் நடை என்று பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.