ToothBrush: பற்கள் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கனுமா? எந்த டூத்ப்ரஷ் யூஸ் பண்ணனும்? தெரிஞ்சிக்கோங்க!
மிருதுவான ப்ரிஸில்ட்ஸ் உள்ள ப்ரெஷை தேர்வு செய்யுங்கள். அது ஈறுகள் மற்றும் பல் எனாமலை பாதுகாக்கும். சென்சிடிவ் பற்கள் உள்ளவர்களுக்கு இது மிகவும் உதவியானது. இவை ப்ளேக் மற்றும் அழுக்கை எந்தவித எரிச்சலும் இல்லாமல் நீக்க உதவுகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇவ்வகை ப்ரிஸில்ட்ஸ்கள் மிகக் கடினமானவயாகவும் இல்லாமல் மிகவும் மிருதுவானவையாகவும் இல்லாமல், நடுத்தரமான தன்மையைக் கொண்டிருப்பவை. இவை பற்களை அதிக சக்தி கொண்டு சுத்தப்படுத்துகிறது. இருப்பினும் சென்சிடிவான ஈறுகளுக்கு இவை உகந்ததல்ல.
கடினமான ப்ரிஸில்ட்ஸ் அதிக விறைப்புத்தன்மை கொண்டவை . அதனால் இவ்வகை ப்ரிஸில்ட்ஸ் தீவிரமாக பற்களை சுத்தம் செய்யவும் முடியும். விடாபிடியான பிளேக் அல்லது கறைகளை அகற்றுவதில் இவை பயனுள்ளதாக இருக்கும்.
மிகவும் சென்சிடிவான பற்கள் மற்றும் ஈறுகள் கொண்டவர்களுக்கு இந்தவகை எக்ஸ்ட்ரா சாஃப்ட் பிரிஸ்டில்ஸ் மிகவும் முக்கியமானது. இவை அல்ட்ரா சாஃப்டாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
இவை நுனி கூர்மையாக அல்லது வட்டமான வடிவம் கொண்டதாக இருக்கும். இவை ப்ளேக் மற்றும் ஈறு நோய்களை தடுக்கக் கூடியதாகும்.
கிறிஸ்கிராஸ் பிரிஸ்டில்ஸ் என்பது பல்வேறு ஆங்கிள்களில் பிரிஸ்டில்ஸ் திரும்பி இருக்கும். இது பற்களை சுத்தம் செய்ய வெகுவாக உதவும். சாதாரண பிரிஸ்டில்ஸ் செல்ல முடியாத இடத்திற்கு கூட இந்த பிரிஸ்டில்ஸ் செல்லும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -