Sugar And Ageing : இனிப்பு சுவை கொண்ட உணவுகளை சாப்பிட்டால் இளம் வயதிலேயே முதிர்ச்சி வந்துவிடுமா?
தினசரி உணவில் அதிகளவில் சர்க்கரை சேர்த்துக்கொள்வதாலும் இனிப்பு சுவை கொண்ட மற்ற பொருட்களை சாப்பிடுவதாலும் இளம் வயதிலேயே முதிர்ச்சியான தோற்றம் வந்துவிடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசர்க்கரை சாப்பிடும் போது உடலில் க்ளைகேஷன் (Glycation)என்ற வேதியல் மாற்றம் நடக்கும். இதில், சர்க்கரை மூலக்கூறுகள் உடலில் உள்ள புரதத்தை சுற்றிக்கொள்ளும். கொலாஜன் மற்றும் எலாஸ்டின் எனும் இரு புரதங்களுடன் சர்க்கரை மூலக்கூறுகள் ஒட்டிக்கொள்வதால் அவை பாதிப்புக்கு உள்ளாகும். இதனால் சருமத்தின் ஒட்டுமொத்த அமைப்பும் பாதிப்படையும். இதனால், சருமத்தில் சுருக்கள், வறட்சி ஆகியவை ஏற்படும்.
இதனால் சர்க்கரை சேர்க்கும் பழக்கத்தை அடியோடு ஒழிக்க வேண்டுமா? என்ற கேள்வி பலரிடம் தோன்றும். ஒட்டுமொத்தமாக ஒழிக்க வேண்டிய அவசியம் இல்லை. இனிப்பு சுவை கொண்ட உணவுகளை குறைவாக சாப்பிட்டாலே போதும்.
35 வயதிற்கு மேற்பட்ட பெண்களின் உடம்பில் ஹர்மோன் மாற்றங்கள் நிகழும். இந்த சமயத்தில் சர்க்கரை சாப்பிட்டால், சீக்கரமாக இளமை தோற்றம் வந்துவிடும்.
அன்றாட சர்க்கரை எடுத்துக்கொள்ளாமல், எப்போதாவது இனிப்பு சுவை கொண்ட உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடலாம். சர்க்கரை சேர்க்கப்பட்ட சோடா வகைகளையும் குளிர் பானங்களையும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அவற்றில் கலோரிகளே கிடையாது.
அடுத்தமுறை சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளையும், இனிப்பு சுவை கொண்ட உணவுகளையும் சாப்பிட ஆசை வந்தால், முகத்தில் சுருக்கங்கள் வந்துவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -