Plastic Water Bottles : பிளாஸ்டிக் பாட்டிலில் சேமித்த தண்ணீரை குடிப்பதால் இவ்வளவு பிரச்சினை வருமா?
பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீரை சேமிக்கவோ அல்லது குடிக்கவோ கூடாது என்று நிபுணர்கள் பரிந்துரைகின்றனர். பிளாஸ்டிக்கிலிருந்து தண்ணீரில் கலக்கும் ரசாயனங்கள் நம் உடலுக்குள் உட்செலுத்தப்பட்டு நோயெதிர்ப்பு மண்டலத்தை சீர்குலைக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபிளாஸ்டிக்கில் phthalates என்ற வேதிப்பொருள் இருப்பதால், கல்லீரல் புற்றுநோய், விந்தணு எண்ணிக்கை குறைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சமீபத்தில், ப்ரெடோனியாவில் உள்ள நியூயார்க் ஸ்டேட் யுனிவர்சிட்டி நடத்திய ஆய்வில், பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரில், அதிகப்படியான மைக்ரோபிளாஸ்டிக்ஸ் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதில் இருக்கும் பைஃபெனைல் ஏ போன்ற இரசாயனங்கள், நீரிழிவு, உடல் பருமன், கருவுறுதல் சம்பந்தமான பிரச்சினைகள், சிறுவயதிலேயே பெண்கள் பருவமடைதல் போன்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம்
தண்ணீர் கொண்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் நேரடியாக சூரிய ஒளியில் படும்போது, டையாக்ஸின் போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களை வெளியிடலாம், இது மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பாட்டில்கள் சுற்றுச்சூழலுக்கும் நல்லதல்ல. பெரும்பாலான பிளாஸ்டிக் கழிவுகள் நிலப்பரப்பு மற்றும் நீர்நிலைகளில் சேருகிறது, இது கடல் வாழ் உயிரினங்களுக்கு இடையூறு விளைவிப்பதோடு நிலத்தை மாசுபடுத்துகிறது.
ஸ்டீல் ப்ளாஸ்க், கண்ணாடி பாட்டில்கள், அலுமினிய பாட்டில்கள் ஆகியவற்றை, பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு மாற்றாக பயன்படுத்தலாம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -