Health Tips: தினம் ஒரு பழம் ஏன் சாப்பிட வேண்டும்? ஹெல்த் டிப்ஸ் இதோ!
உமா பார்கவி | 03 Jul 2023 02:12 PM (IST)

பழங்கள்
1
image நாம் மூன்று வேளை உண்பது முக்கியமல்ல. நம் உணவு சரிவிகித ஊட்டச்சத்து உடையதா என்பது தான் முக்கியம்.
2
உணவில் பழங்கள் இருப்பது அதைவிட முக்கியம். அன்றாடம் ஏதேனும் ஒரு பழத்தை சாப்பிட வேண்டும்.
3
பழவகைகள் நார்ச்சத்து நிறைந்தவை. அதனால் அன்றாடம் ஒரு பழவகை சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து கிடைக்கும்.
4
அன்றாடம் ஏதேனும் ஒரு பழம் எடுத்துக் கொள்வதால் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் கிடைத்துவிடும்.
5
பழங்களில் ஆன்ட்டி ஆக்ஸிடன்டுகள் இருப்பதால் அவை உடலின் நச்சுத்தன்மையை நீக்கும். நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், குடல் போன்ற உடல் உறுப்புகளைப் பாதுகாக்கும்.
6
சிவப்பு நிற பழங்களில் வைட்டமின் ஏ சத்து அதிகம்.ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டது, கண்பார்வை தெளிவுறச் செய்யும் சக்தி சிவப்பு நிற பழங்களுக்கு உண்டு.