Right Time To Eat Fruits:பழங்கள் சாப்பிட சரியான நேரம் எது? எப்படி சாப்பிட வேண்டும்!
பழங்களை காலை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் ரத்த சக்கரை அளவை அதிகரிக்கலாம். அதனால் காலையில் புரதம் நிறைந்த உணவு சாப்பிட்ட பின் பழங்களை சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபழங்களை இரவு நேரங்களில் சாப்பிடுவதை தவிர்க்கவும். இரவில் பழங்கள் சாப்பிடுவதால் செரிமான பிரச்சனையை உண்டாகலாம். பகலில் பழங்கள் சாப்பிடுவதால் உணவு செரிமானத்திற்கு உதவியாக இருக்கும் .
அதே போன்று உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு அல்லது உணவு சாப்பிட்டு ஒரு மணி நேரத்திற்கு பின் சாப்பிடவும்.உணவுக்கு பதில் பழங்களை சாப்பிடுவதாக இருத்தல் காலைவேளையில் சாப்பிடலாம்.
காலை வேளையில் பெர்ரி, வாழைப்பழங்கள் ,வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்கள் ஆப்பிள்,ஆரஞ்சு நார்ச்சத்துக்கள் நிறைத்த பழங்களை சாப்பிடலாம். நாள் முழுவதும் உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கும்
இயற்கையாகவே பழங்கள் இனிப்பு சுவை கொண்டவை. ஆகையால் பழச்சாறாக சர்க்கரை சேர்த்து எடுப்பது, பால் கலந்து எடுப்பது இயற்கைக்கு மாறானது. கோடையில் வேண்டுமானால் பழச்சாறாக எடுத்துக்கொள்ளலாம்
தோல் உள்ள பழங்களை நீரில் அலசி நன்கு சுத்தம் செய்து சாப்பிட வேண்டும் . பழங்கள் சருமத்தை பொலிவாக வைக்க உதவும். அதற்கு சரியான முறையில் சாப்பிடுவதை பழகி கொள்ள வேண்டும்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -