Breakfast : காலை உணவை தவிர்ப்பதால் உடலில் என்னென்ன மாற்றம் ஏற்படும்?
இரவு முழுவதும் சாப்பிடாமல் இருந்து, காலையில் சாப்பிடும் முதல் உணவை ஆங்கிலத்தில் Breakfast என்று அழைக்கிறார்கள்.
காலை உணவை சாப்பிடாமல் இருந்தால் உடலின் மெட்டபாலிசத்தில் மாற்றம் ஏற்படலாம். மேலும் உடல் இயங்குவதற்கு தேவையான சக்தி கிடைக்காமல் போகலாம்.
காலை உணவை தவிர்ப்பதால் உடலின் குளுக்கோஸ் லெவல் குறைந்துவிடலாம். இதனால் மூளைக்கு தேவைப்படும் ஆற்றல் கிடைக்காமல் போகலாம் . இதன் காரணமாக உடற்சோர்வு மற்றும் நியாபக மறதி ஏற்படலாம்.
காலை உணவை தவிர்க்கும் போது குளுக்கோஸ் அளவில் மாற்றம் ஏற்பட்டு சர்க்கரை நோய் உண்டாகலாம்.
காலையில் உணவை சாப்பிடமல் விட்டால் எச்சில் சுரப்பியில் உள்ள சைசோசைம் எனக்கூடிய கிருமி நாசினி செயல் இழந்துவிடும். இதன் விளைவாக வாயில் நுண்கிருமிகள் வளரலாம்
காலை உணவை தொடர்ச்சியாக சாப்பிடாமல் இருந்தால் உடலில் மெட்டபாலிசம் குறைந்து விடலாம். இதனால் ஸ்ட்ரெஸ் லெவல் அதிகரிக்கலாம்.