Bone Health : எலும்புகளை வலுவாக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க!
ஒரு நாளைக்கு இரண்டு கிளாஸ் பால் குடிப்பதால் அன்றாட எலும்புக்கு தேவைப்படும் கால்சியம் சக்தி பூர்த்தியாகிறது. 100 மிலி பசும்பாலில் 3.2 கிராம் புரதமும் உள்ளது
ப்ரோக்கோலி வைட்டமின் சி மற்றும் கால்சியம் ஆகியவற்றின் நல்ல மூலமாகும். இதில் உள்ள பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, சி மற்றும் தாதுநாகம் போன்ற ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் எலும்புகளை ஆதரிக்கும்
உலர் பழங்களில் வைட்டமின் டி மற்றும் கால்சியம் அதிகமாக உள்ளது. வளரும் குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பிணிகள் உலர் பழங்களை தினசரி எடுத்துக்கொள்ளலாம். இது எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
ஒரு கிளாஸ் ஆரஞ்சு சாறு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கிறது. வைட்டமின் சி, பொட்டாசியம், மெக்னீசியம், மற்றும் வைட்டமின் டி மற்றும் கால்சியம் ஆகியவை ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் இணைப்பு திசுக்களை ஆதரிக்கின்றது.
கீரை வகைகளில் புரதம், கால்சியம், வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளது. தினசரி எலும்புக்கு தேவைப்படும் கால்சியத்தை நான்கில் ஒரு பங்கு கீரை வழங்குகிறது.
அதிக ஆண்டி ஆக்ஸிடென்ட் கொண்ட ராகி எலும்புகளை வலுப்படுத்த உதவுகின்றது. 100 கிராம் ராகியில் 344 மில்லிகிராம் கால்சியம் நிறைந்துள்ளது. மேலும் ராகியை கால்சியம்,வைட்டமின் சி, இ, அயன் போன்ற சத்துக்கள் உள்ளது.