ABC Juice: பளபளப்பான சருமத்துக்கு ஏபிசி ஜூஸ்... இதில் இருக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
உடல் ஆரோக்கியத்தையும், இயற்கையான சரும அழகையும் விரும்புபவர்களுக்கு ஏபிசி ஜூஸ் ஒரு வரப்பிரதாசம் ஆகும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABC ஜூஸ் என்பது ஆப்பிள், பீட்ரூட், கேரட் ஆகிய மூன்று பொருட்களையும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு ஜூஸ். இவை மூன்றிலும் வைட்டமின் ஏ, பி, சி மற்றும் ஏராளமான சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.
இவை மூன்றுமே உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி சருமத்தையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கச் செய்கிறது.
ABC ஜூஸில் அதிகப்படியான ஊட்டச்சத்துக்களும் ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் ஆகியவை நிறைந்திருக்கின்றன. நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கச் செய்யும்.
உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த ஜூஸ் நல்ல சாய்ஸ். இதில் உள்ள குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்துக்கள் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்யும்.
இந்த அற்புதமான பானத்தை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது. மாற்றாக, நீங்கள் இரண்டு முக்கிய உணவுகளுக்கு இடையில் சாப்பிடலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -