உடல் எடையை குறைக்கணுமா? இந்த உணவு முறையை பாலோ பண்ணுங்க!

மாதிரிப்படம்
உடல் பருமனாக உள்ளவர்களுக்கு தங்களின் உடல் எடையை குறைப்பது பெரும் சவாலாக உள்ளது.
மது அருந்துவதால், அதிகப்படியான கலோரிகள் காரணமாக உங்கள் எடையை குறைக்க இது தடையாக இருப்பதுடன், உடல் நல பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும் என சொல்லப்படுகிறது.
image உடல் எடையை குறைக்கும் உணவில் நார்ச்சத்துக்களை சேர்க்க வேண்டியதன் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் அறிவோம். குறிப்பாக, நீங்கள் 30 வயதிற்குள் நுழையும்போது நார்ச்சத்துகளை சேர்த்துக்கொள்ள வேண்டியது இன்னும் முக்கியமானதாகிறது.
பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதனை உண்பவர்களின் பசியைப் பூர்த்தி செய்கின்றன. ஆனால் உங்கள் 30 வயதிற்குப் பிறகு உங்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும் என சொல்லப்படுகின்றது.
சிலர் உடல் எடை குறையும் வரை அல்லது சிறிது காலம் மட்டும் டயட்டில் இருந்து விட்டு பின்னர் அதை பின்பற்றாமல் விட்டு விடுகின்றனர். இது முழுமையான பலனை அளிக்காது.
கால்சியத்தை சேர்க்க முயற்சிபதன் மூலம் உங்கள் எடையை குறைக்கவும், உங்கள் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும்.