Winter diet : இந்த குளிர் காலத்தில் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த 6 அற்புத உணவுகள் போதும்!
வைட்டமின் ஏ, ஆண்டி ஆக்ஸிடண்ட் கொண்ட கேரட்டை சாப்பிட்டால் சருமம் பளபளப்பாகும். ஜீரண மண்டலத்திற்கு உதவி புரியும். உடற்பயிற்சி செய்யும் முன்னர் இதை சாப்பிடலாம்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், சளி, இருமலை வராமல் தடுக்கலாம். பருவ கால நோய் தொற்றுகளிலிருந்து நம்மை காக்கலாம். முடி உதிரும் பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கலாம்.
ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைந்த முள்ளங்கி சருமத்திற்கு நல்லது. நீரிழிவு நோயாளிகள் எடுத்துக்கொள்ளலாம். உடல் எடையை குறைக்க உதவும்
கடுகு எண்ணெயில் உணவு சமைக்கலாம். இது கொலஸ்ட்ராலை குறைக்க உதவலாம். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்து காணப்படும் இது, உணவின் சுவையை அதிகரிக்க உதவும்
அவகேடோ எனும் வெண்ணெய் பழத்தில் நல்ல கொழுப்புகளும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. மலச்சிக்கல் வராமல் தடுக்கலாம். சருமம் வறண்டு போகாமல் இருக்க உதவும்.
பாதாம், முந்திரி, பிஸ்தா, காய்ந்த திராட்சை ஆகியவற்றை சாப்பிடலாம். இவை உடலை வலுவாக்க உதவும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -