Sweet Potatoes: சத்துக்கள் நிறைந்த சக்கரைவள்ளி கிழங்கு.. நன்மைகளும் மருத்துவ குணங்களும் என்ன?
பொதுவாக கிழங்கு வகைகள் சாப்பிட்டால் வாயு தொல்லை ஏற்படும் என நினைப்பது உண்டு. ஆனால் சக்கரைவள்ளி கிழங்கில் இருக்கும் நன்மைகள் ஏராளம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇதில் வைட்டமின் சி, பி, மினரல் சத்துக்கள், நார்ச்சத்து, ஆண்டி – ஆக்ஸிடண்ட்ஸ் என அனைத்தும் நிறைந்துள்ளது. உடலில் சதை மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும்.
குழந்தைகள் மெலிந்து இருந்தால் வாரத்திற்கு இரண்டு முறை இந்த கிழங்கை வேக வைத்து கொடுக்கலாம். 8 மாத குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த கிழங்கை சாப்பிடலாம்.
உடலில் கொலஸ்ட்ரால் பிரச்சனையை கட்டுப்படுத்த நினைப்பவர்கள் இந்த கிழங்கை தாராளமாக சாப்பிடலாம். சக்கரைவள்ளி கிழங்கு சாப்பிடுவதால் உடலில் வாயுத்தொல்லை அல்லது கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்காது என கூறுகின்றனர்.
மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் கட்டாயம் இதனை சாப்பிட வேண்டும். இதில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையை நீக்கும். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
நீரிழிவு நோயாளிகள் இந்த கிழங்கை தாராளமாக சாப்பிடலாம், இதனை சாப்பிடுவதால் ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்காது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -