Fever Home Remedies : சாப்பிடாமல் விரதம் இருந்தால் காய்ச்சல் குறையுமா?

காய்ச்சல்
ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிட்டு வருவதால் உடலில் உள்ள தோஷங்களின் சமநிலை மாறும்.
இதனால் வயிற்றில் உள்ள சூடு, உடல் சூடாக மாறுகிறது. காய்ச்சலின் போது ஜீரண ஆற்றல் குறைந்துவிடும். உடல் உஷ்ணமாக இருக்கும். உடலில் உள்ள திசுக்களுக்கான ஊட்டச்சத்து கிடைக்காது.
வயிறும் குடலும்தான் காய்ச்சலுக்கான காரணமாக இருக்கிறது. இதனால், சாப்பிடாமல் விரதம் இருப்பது காய்ச்சலை போக்க உதவும்
விரதம் இருக்கும் போது, ஜீரண ஆற்றல் அதிகரிக்கும் அத்துடன் உடல் தோஷங்கள் அனைத்தும் சீராகும். உங்களால் முடிந்த அளவிற்கு விரதம் இருக்கலாம்
பலவீனமான உடல் கொண்டவர்கள், வாயுத்தொல்லை கொண்டவர்கள், உடல் உழைப்பினால் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் விரதம் இருப்பதை தவிர்க்கலாம்
விரதம் இருக்க முடியவில்லை என்றால், எளிதில் ஜீரணக்கக்கூடிய சூப் போன்ற உணவுகளை சூடாக எடுத்துக்கொள்ளலாம். மந்தமாக்கும் உணவுகளை சாப்பிட வேண்டாம்.