Air Conditioner : ஏசியை ஓவராக பயன்படுத்தினால் என்னென்ன பிரச்சினைகள் வரும் தெரியுமா?
ஏசி அறையில் படுத்து உறங்குவதால் சுவாச பிரச்சினைகள் வரும் ஆபத்து அதிகரிக்கலாம். ஏனென்றால் குளிர் காற்று உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும். எளிதில் வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்றுகள் பரவுவதற்கான அபாயமும் உள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகுளிர் காற்று ஒத்துக் கொள்ளாதவர்களுக்கும், ஆஸ்துமா அல்லது அலர்ஜி போன்ற சுவாசப் பிரச்சினையால் அவதிப்படுபவர்களுக்கும் ஏசி காற்று நல்லதல்ல.
குளிர் காற்று சுவாசப் பாதையை எரிச்சல்படுத்தி இருமல், மூச்சிரைப்பு, நெஞ்சடைப்பு, மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற பிரச்சினைகளை உண்டாக்கலாம். இந்த பாதிப்பை குறைக்க ஏசியை எப்போதும் மிதமான குளிர்நிலையில் பயன்படுத்தவும்.
ஏசி அறையில் தூங்கும் போது ஈரப்பதம் குறைவாக இருப்பதால் கண்களும் சருமமும் வறண்டு போகும். கண்களில் அரிப்பு, கண்கள் சிவந்து போதல்,மங்கலான பார்வையை உண்டாகும் அபாயமும் உள்ளது.
குளிர்ச்சியான காற்று, தசைகளை இறுக்கமாக்கி மரத்துப்போகச் செய்யலாம். இதனால் கால் வலி ஏற்படலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -