வெற்றிலையை தினமும் சாப்பிடலாமா? இதனால் என்ன நன்மைகள் கிடைக்கும்?
மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள் வெற்றிலை சாப்பிடலாம். மலச்சிக்கலை போக்க வெற்றிலையை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, அந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வரலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஉடலில் எங்காவது சிறு காயம் ஏற்பட்டால் வெற்றிலையை அரைத்து அதன் சாறை தடவலாம். சிறந்த வலி நிவாரணியாக இருக்கும். ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆன்டி-மைக்ரோபியல் குணம் கொண்ட இவை இரும்பல் பிரச்சனையை குறைக்கலாம்
வெற்றிலை சாறு, சளி மற்றும் காய்ச்சலுக்கு சிறந்த நாட்டு மருந்தாகும். மூளை, இதயம், கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றை பலப்படுத்தலாம்
குழந்தைகளுக்கு வெற்றிலை கொடுத்தால், மந்ததன்மை போகலாம். நியாபக சக்தி அதிகரிக்கலாம். மேலும் வாய் துர்நாற்றத்தை போக்க உதவும்
வெற்றிலை சாறுடன், வெந்நீர் கலந்து குடித்தால் பல் வலி, ஈறுகளில் வீக்கம், வயிற்று வலி, வயிற்று மந்தம், உப்புசம் போன்றவை குணமாகலாம்.
சிறுநீர் கழிப்பதில் சிரமம் இருந்தால் வெற்றிலை சாறுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பாலுடன் கலந்து குடித்தால் சிறுநீர் வெளியேறலாம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -