Summer Care : கோடையில் சாப்பிட வேண்டிய காய்கறி வகைகள்!
வெள்ளரிக்காயில் 95% நீர் சத்து உள்ளது. வெள்ளரிக்காயில் கலோரி குறைவாகவும் இருப்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தாராளமாக டயட்டில் சேர்த்து கொள்ளலாம். இதில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இரத்த கொதிப்பை கட்டுப்பாட்டில் வைக்க உதவலாம்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவெள்ளரிக்காயை போலவே செலரியிலும் 95% நீர் உள்ளது. இது கோடையில் சாப்பிடக்கூடிய சிறந்த காய்கறிகளில் ஒன்றாகும். செலரியின் தண்டுகளையும் இலைகளையும் சூப்பாக வைத்து சாப்பிடலாம்.
கோடையில் பெல் பெப்பர்ஸ் என்று அழைக்கப்படும் குடைமிளகாயையும் சேர்த்து கொள்ளலாம். இதில் 92% நீர் சத்து உள்ளது. சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, பச்சை வண்ணங்களில் சந்தைகளில் கிடைக்கும்.
அன்றாட சமையலில் முக்கியமான இடத்தை பிடிக்கும் தக்காளி. தக்காளியில் 94% நீர் சத்தும் அதிக அளவு வைட்டமின் சியும் உள்ளது. நீர்ச்சத்து மட்டுமல்லாமல் வைட்டமின் ஏ, இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. இதை வைத்து சட்னி, ரசம் ஆகியவற்றை செய்யலாம்.
கோடை காலத்தில் சுரைக்காயை சாப்பிட்டு வரலாம். சுரைக்காயில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடல் உஷ்ணம் குறையலாம்.
மொறுமொறுப்பான முள்ளங்கியில் நீர்ச்சத்தும் உள்ளது. இதை உணவில் சேர்த்து வந்தால் சளி, இருமல் போன்ற பல உடல் நல பிரச்சினைகளை தடுக்கலாம். முள்ளங்கியில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்திற்கு மிகவும் நல்லது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -