Sesame Health Benefits : பால் பிடிக்கலையா? உங்கள் கால்சியம் தேவைகளை பூர்த்தி செய்ய இருக்கவே இருக்கு எள்!
கால்சியம் என்பது உடலுக்கு தேவையான ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்தாகும். பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில்தான் கால்சியம் நிறைந்துள்ளது. சிலருக்கு பால் குடிக்கவே பிடிக்காது. இப்படி பட்டவர்களின் கால்சியம் தேவையை எள் விதைகள் பூர்த்தி செய்கிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசிலருக்கு பால் ஒவ்வாமை இருக்கும். பால் ஒவ்வாமையால் அவதிப்படுபவர்கள் ஓர் எள் உருண்டையை தினமும் எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் ஒரு கைப்பிடி எள்ளில் ஒரு கிளாஸ் பாலின் கால்சியம் உள்ளது.
இதனால் எலும்புகள் வலுவாக இருக்கும். ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் இருக்கலாம்.
மெக்னீசியம், மாங்கனீசு, தாமிரம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் துத்தநாகம் ஆகிய சத்துகளும் இதில் உள்ளது. எள், உடலுக்குள் இருக்கும் நச்சுகளை வெளியேற்ற உதவலாம். மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவலாம்.
சாலட் மற்றும் ஸ்மூத்தி வகைகளில் எள்ளை சேர்த்துக்கொள்ளலாம். எள்ளில் மொத்தம் இரண்டு வகைகள் இருக்கிறது.
வெள்ளை எள்ளை விட கருப்பு எள் சற்று கசப்பாக இருக்கும். இருப்பினும், கருப்பு எள்ளே சிறந்தது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -