Plums Benefits : பிளம்ஸ் சாப்பிடுவதால் பெண்களுக்கு இவ்வளவு நன்மை கிடைக்குமா?
சுவையான பிளம்ஸ் பழத்தில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஎலும்புகளுக்கு நன்மை : 30 வயதிற்குப் பிறகு பெண்களின் எலும்புகள் வலுவிழக்க ஆரம்பிக்கும். டயட்டில் பிளம்ஸை சேர்த்து கொண்டால் இது போன்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். பிளம்ஸில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து உள்ளது. இவை அனைத்தும் எலும்பு ஆரோக்கியத்திற்கு தேவைப்படும்.
இரத்த சோகையை தடுக்கலாம் : மாதவிடாய் காலத்தில் பெண்களிடம் இரத்த சோகை அதிகமாக காணப்படும். கர்ப்பமாக இருக்கும் போதும் தாய்ப்பால் கொடுக்கும் போதும் உடலில் இரத்தம் தேவைப்படுகிறது. இந்த நேரத்தில் பிளம்ஸ் பழத்தை உட்கொள்ளலாம்
மன அழுத்தத்தை போக்கும் : பெண்களிடையே மன அழுத்தத்தின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிளம்ஸில் உள்ள சபோனின் மற்றும் பாலிசாக்கரைடுகள் மனதை அமைதியாக வைத்திருக்க உதவலாம்.
சீரான மாதவிடாய் சுழற்சி : மாதவிடாய் சுழற்சியை சீராக்க பிளம்ஸ் உதவலாம். பிளம்ஸ் சாப்பிடுவதால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி குறையலாம்.
ஹார்மோன் சமநிலை : பிளம்ஸில் உள்ள ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. மாதவிடாய் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறையும் போது பிளம்ஸ் பழம் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -