Nithya Kalyani Benefits : சர்வரோக நிவாரணியாக செயல்படும் நித்ய கல்யாணி டீ!
சர்க்கரை நோயாளிகள் : நித்திய கல்யாணி செடியின் இலைகளை நன்கு காய வைத்து, பொடியாக்கி டப்பாவில் போட்டுக்கொள்ளவும். இந்த பொடியை 1 டீஸ்பூன் அளவு எடுத்துக்கொண்டு தண்ணீரில் சிறிது நேரம் கொதிக்க வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதீடீரென்று இரத்த சர்க்கரை அளவு அதிகரித்துவிட்டால், இதன் இலைகளை மென்று சாப்பிடலாம். ப்ரெஷ்ஷான நித்ய கல்யாணி பூக்களையும் கொதிக்க வைத்து வெறும் வயிற்றில் குடிக்கலாம்
இரத்த அழுத்தம் : ப்ரெஷ்ஷான 5 வெள்ளை நித்திய கல்யாணி இலைகளை இடித்து சாறு எடுத்து, காலையில் குடித்து வந்தால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
மாதவிடாய் கோளாறுகள் : 6-8 இலைகளை 2 கப் தண்ணீரில், பாதி அளவுக்கு வரும் வரை கொதிக்க வைக்கவும். இதை மாதவிடாயின் போது குடிக்க வேண்டும். தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு குடித்து வந்தால், அதிக இரத்த போக்கு, 1 நாள் கூட சரியாக வராத மாதவிடாய் பிரச்சினை சீராகலாம்.
சரும பிரச்சினைகள் : இதன் இலைகளை மையாக அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினால், சரும எரிச்சல், வீக்கம் போன்றவை நீங்கலாம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -