Health: நைட் சாப்பிட்ட பிறகு இதெல்லாம் பண்ணாதீங்க!
சாப்பிடும் முறைகளும், அதற்கு முன்னும் பின்னும் செய்யக்கூடாதவைகளும் உண்டு. இரவில் தாமதமாக சாப்பிடுவது, குறிப்பாக தூங்கும் முன் சாப்பிடுவது உங்கள் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇரவில் உணவு சாப்பிடவுடன் தூங்கக் கூடாது. பலருக்கு உணவு உண்ட உடனேயே தூங்குவது வழக்கம். இது நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணத்திற்கு வழிவகுக்கும்.
புகைபிடித்தல் சாதாரணமாகவே தீங்கு விளைவிக்கும் ஒன்றாகும். ஆனால் இரவு உணவிற்குப் பிறகு சிகரெட் பிடிப்பது உடல்நலப் பிரச்சினைகளை மேலும் மோசமாக்கும்.
உணவுக்குப் பிறகு அதிகமாக திரையைப் பார்ப்பது பல ஆபத்துகளை ஏற்படுத்தும். திரைகளைப் பார்ப்பது மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை உயர்த்தி, தூக்கத்தின் ஆழத்தை பாதிக்கும்.
இரவு உணவிற்குப் பிறகு உடனடியாக உட்கார்ந்து அல்லது ஓய்வெடுக்காமல், சுமார் 10 நிமிடங்களுக்கு ஒரு சிறிய நடைப்பயிற்சி செய்தால் நன்மை கிடைக்கும்.
உடலுக்கு தண்ணீர் முக்கியம் என்றாலும், சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பது செரிமானத்தைத் தடுக்கும். இது வயிற்று நொதிகள் மற்றும் சாறுகளை நீர்த்துப்போகச் செய்யும்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -