Broccoli Benefits: குறைந்த விலையில் கிடைக்கும் ப்ரோக்கோலியில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?
ப்ரோக்கோலி புற்றுநோயின் ரிஸ்க்கை குறைப்பதிலும், அப்புற்று நோய் ஏற்படாமல் தடுப்பதிலும் சிறப்பாக செயல்படுவதாக சொல்லப்படுகிறது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appப்ரோக்கோலியில் இருக்கும் சல்போரபேன், கண்களில் அழுத்தம் ஏற்படுவதைத் தடுக்கிறது.
ப்ரோக்கோலியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் இந்த ப்ரோக்கோலியில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது. இது ரத்தத்தில் கெட்ட கொழுப்புகளை அதிகம் சேரவிடாமல் தடுத்து, இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுத்து இதய நோய் வராமல் தடுக்க உதவலாம்.
எலும்புகள் வலிமை பெற உதவும் ஒரு இயற்கை உணவாக ப்ரோக்கோலி இருக்கிறது. ப்ரோக்கோலியில் வைட்டமின் கே சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.
தாவர உணவுகள் சார்ந்த ஃபிளாவனாய்டுகளில் உடல் அழற்சியை எதிர்த்து போராடக்கூடிய ஆன்டிஆக்ஸிடண்டுகள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இதன் இலைகள் நைட்ரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்துவதால், வீக்கங்கள் ஏற்படாமல் இருக்க உதவலாம்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -