Masoor Dal : இந்த பிரச்சினைகள் இருந்தால் மசூர் பருப்பை தவிர்த்திடுங்க!
இந்திய சமையல்களில் மசூர் பருப்பு பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிக புரதம், குறைவான கலோரி கொண்ட இதை, உடல் எடையை குறைக்கும் டயட்டில் சேர்த்து கொள்கின்றனர்.
இது, இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம், இரத்த சோகை வராமல் தடுக்கலாம், இதய ஆரோக்கியத்தை காக்கலாம் , பளபளப்பான சருமத்தை பெற உதவலாம். இருப்பினும் மசூர் பருப்பை அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்
மசூர் பருப்பு வகைகளில் ப்யூரின் அதிகம் உள்ளது. பியூரின்கள் யூரிக் ஆசிட்டின் அளவை அதிகரிக்கலாம் அத்துடன் மூட்டு வலியை உண்டாக்கலாம். யூரிக் ஆசிட் சிக்கல் உள்ளவர்கள் பருப்பு வகைகளை அதிகம் சாப்பிடாமல் இருப்பது நல்லது.
சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களும் மசூர் பருப்பை சாப்பிடுவதை தவிர்க்கவும். இந்த பருப்பு வகையில் ஆக்ஸலேட்ஸ் அதிகம் உள்ளதால் சிறுநீரக கற்கள், பிற சிறுநீரக நோய்கள் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
மசூர் பருப்பில் ஃபைபர் சத்து அதிகம் இருப்பதால் சில நேரங்களில் வாயு பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். அளவுக்கு அதிகமாக உட்கொள்வதால் அசிடிட்டி பிரச்சனை ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்
மசூர் பருப்பு வகைகளில் புரதச்சத்து அதிகம் உள்ளது. இதனை அதிகமாக டயட்டில் சேர்த்து கொள்வது நல்லது அல்ல. மேலும் அதிகப்படியான கொழுப்பு சேரும் அபாயமும் ஏற்படலாம்.