Asthma : எப்போதும் இருமல் வருதா? ஆஸ்துமாவின் அறிகுறியாக கூட இருக்கலாம்!
சுவாசப்பாதையை சுற்றியுள்ள தசைகள் இறுக்கமடைந்து காற்றுப்பாதையில் ஏற்படும் வீக்கத்தை ஆஸ்துமா என்கின்றோம். நமக்கு ஆஸ்துமா வந்துவிட்டதா என்பதை கண்டறிய சில வழிகள் உள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஆஸ்துமா வருவதற்கு, சிகரெட் புகை, மாசடைந்த காற்று, தூசி, துகள் ,ரசாயனங்கள் கழிவுகள் ஆகியவை முக்கிய காரணமாக இருக்கிறது
காலை மட்டும் இரவில் கட்டுக்கடங்காமல் இருமல் வரும். இருமலுடன் சளியும் வரும். தொடர்ச்சியாக இருமல் வருவதால் தொண்டைக்குழாயில் எரிச்சல் ஏற்படும்.
மூச்சுத்திணறல் ஏற்படலாம், சுவாசிக்கும் போதும் மூச்சுவிடும் சத்தம் கேட்கும். அதிகப்படியான மூச்சுதிணறல் ஏற்பட்டால் மயக்கம் வரலாம்
மார்பில் இறுக்கமான உணர்வு ஆஸ்துமாவின் பொதுவான அறிகுறியாகும். ஏதோ அழுத்துவது போல உணர்வை ஏற்படுத்தி விரைவான இதயத் துடிப்பு அல்லது படபடப்பை உண்டாக்கலாம்
கோடைகாலத்தில் ஆஸ்துமாவின் தாக்கம் கடுமையாக இருக்கலாம். இது போன்ற அறிகுறிகள் உங்களுக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -