Health Tips :இஞ்சியும் மஞ்சளும் ஒன்றாக சேர்த்து சாப்பிடலாமா? இதைப் படிங்க!
இஞ்சியும் மஞ்சளும் பல ஆண்டுகளாக நாம் உணவும் பெரும் பங்கு வகிக்கிறது. இவை இரண்டிலும் பல மருவ பண்புகளும் உள்ளத்தையும் நாம் அறிவோம். இருப்பினும் , இவை இரண்டையும் நாம் சேர்த்து சாப்பிடுவதால் என்ன விளைவுகளை ஏற்படும் என்பதை கீழே பார்க்கலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇஞ்சி மற்றும் மஞ்சள்களில் இந்த மசாலா பொருட்களை அளவுக்கதிகமாக சாப்பிடும் போது வயிற்றுக் கோளாறுகள், நெஞ்சு எரிச்சல், வயிற்றுப்போக்கு, அலர்ஜி போன்ற பிரச்சனைகளை உண்டாகலாம்.
பளிச்சென்ற நிறத்தைக் கொண்ட மஞ்சள் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்தது. மஞ்சள் சளி, இருமல், குடல் அழற்சி நோய் போன்றவற்றை குணப்படுத்தவதாக ஆய்வில் கூறுகின்றனர்.
நறுமணத்திற்கும் பெயர் பெற்ற இஞ்சியில் பல மருத்துவ குணங்கள் உள்ளது.இஞ்சி குமட்டல் மற்றும் மாதவிடாய் கால வலியை போக்கவும் பல வழிகளில் பயன்படுகிறது.
இவை இரண்டையும் தனித்தனியாக சாப்பிடுவதை விட ஒன்றாக சேர்த்து சாப்பிடும் போது எச்சரிக்கையோடே அணுக வேண்டும். இஞ்சி மற்றும் மஞ்சள் இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் இரைப்பை குடல் சார்ந்த பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளதாக சில மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ரத்தம் உறைதல், டயாபடீஸ், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு மருந்து மாத்திரை எடுத்துக்கொள்பவர்கள் இஞ்சி, மஞ்சள் கலந்த சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும் என்று கூறுகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -