Influenza Symptoms : சலி, காய்ச்சல், தொண்டை வலி இருக்கா..தொற்று பரவும் காலத்தில் மருத்துவர்கள் கூறுவது என்ன?
இன்புளுயன்சா காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் இன்புளுயன்சா சிகிச்சைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appப்ளு காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகள் மூன்று வகைகளாக பிரிக்கப்படுகின்றனர்
A வகை : லேசான காய்ச்சல், இருமல்
B வகை : தீவிர காய்ச்சல், அதிக இருமல்
C வகை : தீவிர காய்ச்சல், தொண்டை வலி ஆகியற்றோடு மூச்சுவிடுவதில் சிரமம், நெஞ்சுவலி
C வகை பிரிவினர் கட்டாயம் மருத்துவமனையில் அனுமதி பெற்று சிகிச்சை பெற வேண்டும்
தனிமைப்படுத்தலில் இருப்போர் 24 மணி நேரமும் 104,108 எண்களில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை தெளிவுப்படுத்திக்கொள்ளலாம்
மருத்துவமனைகளை பொறுத்தவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் பணி புரிவோர் கட்டாயம் முகக்கவசமும் அணிந்திருக்க வேண்டும்
தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் கொரோனா உடன் இந்த காய்ச்சலும் அதிகம் பரவி வருகிறது
வெறும் கைகளால் கண் அல்லது முகத்தை தொடுவதை தவிர்க்க வேண்டும், காய்ச்சல் வந்தால் சுய மருத்துவம் எடுத்துக்கொள்ளாமல் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -