HPV vaccine : HPV தடுப்பூசியை பற்றி பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்!
கர்ப்பப்பை வாய் புற்றுநோய், 90 சதவீதம் HPV வைரஸுடன் தொடர்புடையது. அதனால், கூடிய விரைவில் இந்த HPV தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை செய்கின்றனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App9-15 வயதிற்கு உட்பட்ட சிறுமிகள் இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம். 45 வயதுக்கு உட்பட்ட பெண்களும் இதை போட்டுக்கொள்வது நல்லது.
பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். ஏனென்றால், HPV தொடர்புடைய புற்றுநோய், தொண்டையின் பின்பகுதியிலும் வாயிலும் ஆசனவாயிலும் ஆணுறுப்பிலும் வரலாம்.
தடுப்பூசியை போட்டுக்கொண்டாலும், 3 வருடத்திற்கு ஒருமுறை மகப்பேறு மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இந்த பரிசோதனை, ஆங்கிலத்தில் (Pap Smear) என்று அழைக்கப்படுகிறது.
கருப்பை வாய் புற்றுநோய்க்கு போடப்படும் தடுப்பூசிகள் எந்த பிராண்டாக இருந்தாலும், அவை இரண்டு வகையான புற்றுநோயை மட்டுமே தடுக்கும்
இணையத்தில், HPV தடுப்பூசி இலவசமாக கிடைக்கும் என்ற தகவல் பரவி வருகிறது. ஆனால், இது உண்மையல்ல. தடுப்பூசி போட்டுக்கொள்ள பணத்தை செலவழிக்க வேண்டியிருக்கும். உங்கள் மருத்துவரை அணுகி, தடுப்பூசியை போட்டுக் கொள்ளுங்கள்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -