உங்கள் குழந்தைக்கு அடிக்கடி சளி பிடித்து விடுகிறதா..அப்போ இவற்றை செய்து பாருங்கள்!
குழந்தைகளுக்கு வளரும் காலங்களில்,நோய் எதிர்ப்பு சக்தி அவ்வளவாக இருக்காது. குறிப்பிட்ட வயதை கடந்த பிறகு,நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெறும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇதனால் குழந்தைகளுக்கு அடிக்கடி சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
உங்கள் குழந்தையின் தொண்டையில் இருக்கும் கரகரப்பை போக்க, குழந்தைக்கு தேனை கொடுங்கள். ஐந்து வயதிற்கு மேற்பட்ட குழந்தையாக இருந்தால், தேனில் சிறிய அளவு சுண்ணாம்பை கலந்து, தொண்டை முழுவதும் பற்று போடுங்கள்.
பருவநிலை மாற்றம் வரும் சமயங்களில்,குழந்தைகளுக்கு திடீரென சளி பிடித்து விடும். அத்தகைய நேரத்தில்,அவர்களின் வயதிற்கு ஏற்றார் போல,மஞ்சள், பூண்டு மற்றும் மிளகு கலந்த பாலை தயாரித்துக் கொடுங்கள்.
சளி பிடித்த காலத்தில் குழந்தைகளுக்கு, அதிகமான தண்ணீர் குடிக்கக் கொடுங்கள்.
உடலில் இருக்கும் சளியை சரி செய்யும் தன்மையானது,வெற்றிலை மற்றும் கற்பூரவள்ளி இரண்டிற்கு உண்டு. ஆகவே உங்கள் குழந்தையின் வயதிற்கு ஏற்றார் போல, இந்தப் பொருட்களில் ஏதேனும் ஒன்றை அவர்களுக்கு கொடுங்கள்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -