Healthy Lifestyle : ஆரோக்கியமாக வாழ அனைவரும் பின்பற்ற வேண்டிய பழக்கங்கள்!
காலை வேளையில் சாப்பிடும் உணவை ஒரு போதும் தவிர்க்க கூடாது. ஆரோக்கியமான உணவுடன் ஒவ்வொரு நாளையும் தொடங்க வேண்டும். அன்றாட உணவில் அதிக அளவில் சர்க்கரையை உட்கொள்ள கூடாது. சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளையும் பானங்களையும் எப்போதாவது எடுத்துக்கொள்ளலாம்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஉடல் வறண்டு போகும் அளவிற்கு தண்ணீர் குடிக்காமல் இருக்க கூடாது. தினமும் 2-3 லிட்டர் தண்ணீரை கட்டாயம் குடிப்பதை உறுதி செய்யவும். ஒரே இடத்தில் உட்கார்ந்த படி இருக்க கூடாது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் கொஞ்சம் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்
10 மணிக்கு மேல் சிற்றுண்டி வகைகளை சாப்பிட கூடாது. ஆரோக்கியமான உணவுகளை காலை, மதியம், மாலையில் சாப்பிட வேண்டும். மன ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்க கூடாது. மன அழுத்தத்தை கட்டுப்படுத்தி மன நிறைவாக இருக்க பழகிக்கொள்ள வேண்டும்
எப்போதும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது தவறான பழக்கம் ஆகும். இயற்கையான உணவுகளை ஃப்ரெஷ்ஷாக சாப்பிட வேண்டும். ஆந்தை போல் தூங்காமல் விழித்துக்கொண்டு இருப்பது. தினமும் 7-9 மணி நேரம் தூங்க வேண்டும்
வருடத்திற்கு ஒரு முறை அல்லது இருமுறை முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும். மூச்சு முட்டும் அளவிற்கு சாப்பிடாமல், உணவை அளவாக சாப்பிட்டு வர வேண்டும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -