Cure Constipation : மலச்சிக்கலை சரி செய்ய இந்த உணவுகளை டயட்டில் சேருங்க!
ப்ரோக்கோலி, காலிஃபிளவர், முட்டைக்கோஸ் ஆகியவை ஒரே இனத்தை சார்ந்த காய்கறிகளாகும். ப்ரோக்கோலியில் நார்ச்சத்து, நீர்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் சி, பி6 போன்றவை உள்ளது. இவற்றை வைத்து சாலட், சூப் செய்யலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபச்சைக் கீரைகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. உணவில் கீரை வகைகளை சேர்த்து கொள்வதால் பெருங்குடல் சுத்தமாக இருக்கும். இவற்றை உட்கொள்வதால் உடலுக்கு தேவையான இரும்பு சத்தும் கிடைக்கும்.
தினமும் பழச்சாறுகள், ஸ்மூத்தி வகைகளை குடிக்கலாம். இதில் இருக்கும் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் செரிமான திறனை மேம்படுத்த உதவலாம்.
தானியங்கள், நட்ஸ் வகைகள், பருப்பு வகைகள் போன்றவற்றில் நார்ச்சத்துக்கள் மிகுதியாய் காணப்படுகின்றன. இவை அனைத்தும் மலச்சிக்கல் பிரச்சினையை சரியாகலாம்.
உணவில் புரோபயாடிக்குகளை சேர்க்கவும். தயிர், கிம்ச்சி, ஊறுகாய் போன்ற புளித்த உணவுகளை அன்றாட சாப்பிடுங்கள். புரோபயாடிக்குகள், நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவி குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
ஓட்ஸில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் காலை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் நார்ச்சத்து மட்டுமின்றி, கால்சியம், வைட்டமின் டி ஆகிய சத்துக்களும் உள்ளன
- - - - - - - - - Advertisement - - - - - - - - -