Cancer Causing Foods : புற்றுநோயை உண்டாக்கும் மோசமான உணவு பொருட்கள்!
உணவு பொருட்கள் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கவும், நிறம், சுவை, மணம் மாறாமல் இருக்கவும் சில கெமிக்கல்களை சேர்ப்பார்கள். பிஸ்கட், பிரட், சாக்லேட், கேக் போன்ற உணவு பொருட்கள் பதப்படுத்தப்பட்டு பேக் செய்யப்படுகிறது. இதனால் புற்றுநோய் அபாயம் வரலாம்.
தற்போது எளிமையாக கிடைக்கும் பார்பிக்யூ போன்ற சுட்ட உணவுகளை சாப்பிடுவதால் கேன்சர் வரலாம். சிக்கன், மட்டன், மீன் போன்ற இறைச்சிகளை நேரடியாக தீயில் சுடும் போது கேன்சரை உண்டாகக் கூடிய HC ASL கலவை வெளிப்படும். அதிகப்படியாக இதை சாப்பிடும் போது புற்றுநோய் அபாயம் உண்டாகலாம்.
உணவு சாப்பிட உடன் சோடா மற்றும் குளிர்பானங்கள் குடிக்கும் பழக்கம் பலரிடம் உள்ளது. பல வண்ணங்களில் கிடைக்கும் குளிர்பானங்களில் செயற்கையான நிறமூட்டி , சர்க்கரை போன்றவற்றை சேர்ப்பார்கள். அதிகப்படியாக சோடா மற்றும் குளிர் பானங்களை குடிப்பவர்களுக்கு 13 வகையான கேன்சர் வரலாம் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
பஞ்சுமிட்டாய், கேசரி பவுடர், ஸ்வீட்ஸ், பேக்கரி உணவுகள், கலர் மிட்டாய்கள் போன்ற உணவுகளில் செயற்கை நிறம் மற்றும் மணம் சேர்க்கப்படுகின்றன. இந்த உணவுகளை அதிகப்படியாக எடுத்துக்கொள்ளும் போது புற்றுநோய் செல்கள் உடம்பில் உற்பத்தி ஆக வாய்ப்புள்ளது
தாவரங்கள், விலங்குகளிடம் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் செறிவூட்டப்படும் போது கெட்ட கொழுப்புகள் அதிகரிக்கின்றன. இந்த எண்ணெயில் செய்யக்கூடிய பிஸ்கட், கேக், கிரீம், பப்ஸ், பர்கர், பீசா போன்ற உணவுகளை முடிந்த வரை தவிர்ப்பது பலவகை புற்றுநோயிலிருந்து உடலை காக்க முடியும்.