Skin Care: முகப்பொலிவு க்ரீம்கள் ஆபத்தானதா?
அடிக்கடி முகப்பொலிவு க்ரீம்களை பயன்படுபவர்களா? நீங்கள் இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.முகப்பொலிவு க்ரீம்கள் சருமத்திற்கு பளபளப்பை தருவதோடு மட்டுமல்லாமல் சிறுநீரக பிரச்சனையை உண்டாக்கவும் வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமுகப்பொலிவு க்ரீம்களில் முகத்தை பிரகாசிக்க வைத்தாலும் அதே சமயம் சிறுநீரகம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.முகப்பொலிவு க்ரீம்களை பயன்படுத்தும் போது மெம்பரேனஸ் நெப்ரோபதி என்ற சிறுநீரக கோளாறு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
முகப்பொலிவு க்ரீம்களில் உள்ள ஹைட்ரோகுயினோன் சருமத்தில் வறட்சியையும், எரிச்சலையும் உண்டாக்கலாம். மேலும் இந்த க்ரீம்களில் உள்ள அதிகப்படியான பாதரசம் தலைவலி உள்ளிட்ட சில உபாதைகளை உருவாக்கலாம்.
நீண்ட நாட்கள் முகப்பொலிவு க்ரீம்களை பயன்படுத்துவதால் தோல்கள் மெலிந்து, பலவீனமடைவதோடு தொற்றுகள் எளிதாக தாக்கும் அபாயமும் உள்ளது. இது சருமத்தில் வீக்கத்தை ஏற்படுத்தலாம்.தாய்மார்கள் முகப்பொலிவு க்ரீம்களை பயன்படுத்துவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
கடைகளில் வாங்கும் முகப்பொலிவு க்ரீம்கள் பலரும் நினைப்பதை விடவும் மிகவும் ஆபத்தானது.முகப்பொலிவு க்ரீம்கள் பயன்படுத்துவோருக்கு சிறுநீரக பிரச்சனை போன்ற உடல்நலக் கோளாறுகள் வருவதற்கான சாத்திய உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
பொலிவுக்காக க்ரீம்களை பயன்படுத்துவதால் சில சமயங்களில் சருமத்தில் திட்டுகள் வரலாம்.சரும பராமரிப்பு பொருட்களை வாங்குவதற்கு மருத்துவர்களிடம் ஆலோசிப்பது நல்லது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -