Vitamin D:உலர் பழங்கள் சாப்பிடுவது ஏன் நல்லது? ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்வதென்ன?
உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் வைட்டமின்களில் மிகவும் சிறந்தது வைட்டமின் டி.அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் எலும்புகளை ஆரோக்கியமாக வைக்க உதவும்.
வைட்டமின் டி-யின் சிறந்த ஆதாரம் சூரிய ஒளி.வைட்டமின் டி-யை பெறுவதற்கு அனைவராலும் நேரம் ஒதுக்கி வெயிலில் உட்கார முடியாது . வயது ஏற ஏற எலும்பு தேய்மானம் ஏற்படும் அபாயம் உள்ளது.எதனை தடுக்க வைட்டமின் டி போதுமான அளவு உடலுக்கு கட்டாயம் தேவை.
ட்ரை ஃப்ரூட்ஸ் எனப்படும் உலர் பழங்கள் வைட்டமின் டி குறைபாட்டை சரி செய்ய உதவும் சிறந்த உணவாகும்.உலர் பழங்களில் மற்ற வைட்டமின்ஸ்களும் நிறைந்து காணப்படுகின்றன. உலர் பழங்கள் எலும்புகளை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியையும் உடலுக்கு கொடுக்கிறது .
100 கிராம் உலர் திராட்சையில் 2.1 மைக்ரோகிராம் அளவிலான வைட்டமின் டி உள்ளது. மேலும் உலர் திராட்சையில் வைட்டமின் ஏ, பி, சி ,நார்ச்சத்து, இரும்பு போன்ற முக்கியமான தாதுக்கள் போன்ற சத்துக்கலும் அதிகமாக உள்ளன
இரவில் படுக்கும் முன் உலர் திராட்சையை எடுத்து கொள்வது அதிக பலன் கொடுக்கும் . குறிப்பாக கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர் . எனவே உலர் திராட்சையை தொடர்ந்து சாப்பிட்டு வருவது கண் சார்ந்த நோய்கள் வராமல் தடுக்க உதவலாம்.
உலர் திராட்சையில் கொழுப்பு குறைவு, அதே சமயம் உலர் திராட்சையில் நார் சத்து நிறைந்திருக்கிறது. இதனை இரவில் தூங்க செல்லும் முன் சாப்பிடும் போது நீண்ட நேரம் பசி எடுக்காமல் பார்த்துக்கொள்ளும் . இது ஒருவகையில் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது